top of page

விந்தையானவன்

  • Writer: ஸ்ரீ ராம் குமார்
    ஸ்ரீ ராம் குமார்
  • Oct 10, 2019
  • 1 min read

Updated: Feb 26


யோகம் நிறைந்து உருவான தெளிவு தேகம் மலர்ந்து ஒளிர்கின்ற பொலிவு

அணி ஆடை கூறும்

இரகசியச் சிறப்பு 

தாண்டவமாடும் இவன்

தனியா நெருப்பு.


எங்கோ இருந்து வந்தான்

ஏதேதோ செய்தான்

எத்தனையோ அதிசயங்கள் 

எளிதில் நிகழ்வித்திட்டான்.


சுட்டு எரிக்கும் சுடரானவன்,

அருவிளிருந்து முதலுருவாய் உருவானவன்,

யோகத்தின் மூலக் கருவானவன்,

யாம் வணங்குகின்ற திருவானவன்.


சூன்யமாய் தொடங்கிய  தொடக்கமிவன்,

எல்லாம் தனக்குள் அடக்கியவன்,

'சக்தி' யைக் கட்டும் யுக்தி இவன்,

யாம் தேடுகின்ற முக்தி இவன்.


யோகம், கோரம், ஞானம் 

பொங்கும் புதிர்

அடங்கா கதிர், ;

அவன் எவன்

எங்கள் சிவன்.



댓글


Join my mailing list

Thanks for submitting!

bottom of page