top of page

கருவறை

  • Writer: ஸ்ரீ ராம் குமார்
    ஸ்ரீ ராம் குமார்
  • Oct 14, 2019
  • 1 min read

Updated: Nov 25, 2019



ஒரு குழந்தையைச் சுமப்பதுபோல் கவிதையைச் சுமந்த அந்த காலங்கள் -என் வாழ்வில் அழிக்க முடியா கோலங்கள் .

வேற்று கிரகத்தினைப் பார்ப்பது போல் கவிதை உலகை வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன் அவ்வுலகில் வாழ நானும் ஏங்கிக்கொண்டிருந்தேன் .

அதுவரை சுனையயிருந்த என் இலக்கிய ஆர்வம் பாரதியைக் கண்டபின்னர் புனலானது நானிருப்பதே கவியுலகமென்று தெரியவைத்து கவிதையின் அடுத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று புரியவைத்தது ; என்னுள் கவிதையையும் பிறக்கவைத்தது .

பின் உலகம் முழுவதையும் தமிழால் பார்த்தேன் அவையனைத்தையும் -என் சிந்தையில் கவிதையாய்ச் சேர்த்தேன் .

அந்த காலம் என் பொற்காலம் என் கனவினிலும் நனவினிலும் எங்கேயும் கவிதையையே சுவாசித்த காலம் .

இப்போது மூச்சினை அடக்கி பன்னிரண்டாம் வகுப்பெனும் ஆழ நதியினைக்கடந்து மூன்றுமாத விடுமுறையில் மூச்சு வாங்கி மீண்டும் கவிதையை சுவாசிக்க ஆரம்பித்துவிட்டேன் .

என் வாழ்கையின் களிப்பில் மட்டுமல்ல கண்ணீரிலும் கூட கவிதையே இருக்கும் , என் உயிர் பிரிந்தாலும் உடல் அழிந்தாலும் உடலின் எஞ்சிய அணுவின் அதிர்வு கூட தமிழென்றே துடிக்கும் .

Comments


Join my mailing list

Thanks for submitting!

bottom of page