இந்தியா
- ஸ்ரீ ராம் குமார்
- Oct 14, 2019
- 1 min read

அடியில் கிடந்தவன் உயரம் போனான்
நம்மை ஆண்டு கொண்டும் இருக்கிறான்
அடிமையாய் க் கிடந்தே நாம் வளர்கின்றோம்
வளரும் நாடாகவே இன்றும் இருக்கின்றோம்
காடுமேடால் வளர்ந்தோம் முடங்கிப் போனோம்
காரணம் என்னவோ? கூறுகிறேன் கேளுங்கள்.
கல்வியில் சிறந்தோம் அதன்படியும் நின்றோம்-ஆனால்
கற்றபயனை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டோம்
பள்ளத்திலிருந்து உயர்த்துகிறேன் என்று -நம்
முதுகேறி உயருகிறான் அந்நியன் இன்று
பணதுக்கென மட்டும் பணிசெய்வது நன்றோ
இவ்வாரிருந்தால் நம்நாட்டிற்கு வளர்சியு முண்டோ?
இயற்கையோடு போராடி வளம் பெருக்கவேண்டும் செயற்கையைக் கொண்டியற்கை வளர்க்க வேண்டும் நம்நாட்டின ரெல்லாம் தம்தம்திறமை பெருக்கவேண்டும் திறமையைக் கொண்டு கல்வி,செல்வம் பெருக்கவேண்டும் பொருளுக்குப் பாடுபடாது நம்நாட்டிற்க்கு பாடுபட வேண்டும் இதுசெய்ய விரைவில் வல்லரசாகும் நம் நாடே...
Comments