top of page

இனியவள்

  • Writer: ஸ்ரீ ராம் குமார்
    ஸ்ரீ ராம் குமார்
  • Feb 22
  • 1 min read

தொடை நீள குழல் எதற்கு

தோள் அளவு முடி போதும்

மெல்லிய இடுப்பெதற்கு - தடித்த

அவள் இடை போதும்

அன்னம் போன்ற அசைவெதற்கு

அதிரும் களிரு நடை போதும்

சிற்பம் போன்ற வதனமெதற்கு

சிரித்த முகம் அது போதும்.


தாயினும் அண்புடையவளாய்

*தௌமாடினினும் இனியவளாய்

காதலி உடன் இருக்க

கற்பனை அழகெதற்கு

அவள் நிஜத்தின் அழகு போதும்.


குறிப்பு


*தௌமாடின் - உலகின் மிகவும் இனிப்பான இயற்கைப் பொருள். சர்கரையை விட 3000 மடங்கு அதிக இணிப்புடையது. ஆப்ரிக்க கண்டத்தில் விளையும் கடாம்பே என்னும் பழத்தில் இருந்து எடுக்ககப் படுவது


மெட்ரோவில் பயணித்த போது கண்ட ஒரு காதல் ஜோடியே இந்த கவிதையின் ஊக்கம். அந்த இளைஞனின் பார்வைக்கோனத்தில் இருந்து எழுதப்பட்டது இந்த கவிதை.




Comentários


Join my mailing list

Thanks for submitting!

bottom of page